ரியாத்:

பெண்களின் ஆடைகளுக்கு அதிக கட்டுப்பாடு உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. ஆனால், தற்போது அந்த நாட்டு பெண்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புதிய சொகுசு ரிசார்ட்டை இளவரசர் முகமது பில் சல்மான் அறிவித்துள்ளார்.

சவூதியின் வடமேற்கு கடற்கரை பகுதியில் தொடங்கப்படும் இந்த ரிசார்ட்டில் பெண்கள் விரும்பும் ஆடைகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுய தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த ரிசார்ட்டில் பெண்களின் ஆடை கட்டுப்பாடுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரையில் பெண்கள் நீச்சல் உடை (டூ பிஸ்) அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரிசார்ட் சர்வதேச தரத்துடன் சவூதி சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் என்று டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. துபாய்க்கு அடுத்த சுற்றுலா தளமாக மாற்றும் நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது.

அதனால் இங்கு பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மத்திய மேற்கத்திய நா டுகளின் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளது. இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்தால் உலகின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணைய் முக்கிய பங்காற்றும் என்று இளவரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல விசா தேவையில்லை. இங்கு பாராச்சூட்டிங், டிரக்கிங், மலை ஏற்றம் போன்றவையும் இருக்கும். மேலும், இந்த செங்கடல் திட்டத்தில் இயற்கை அம்சங்களும், டைவ் அடிக்கும் அம்சங்களும் இடம்பெறும் என ‘‘தி சன்’’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதோடு சொகுசு ஓட்டல்கள், தீவுகள், மாலதீவின் லகூண்கள் ஆகியவை இடம்பெறும். மசாஜ் மையங்கள் (ஸ்பா சென்டர்), அரேபியன் சிறுத்தைகள், ஃபல்கான் பறவைக¬ள் அடங்கிய வன உயிரியல் பூங்காவும் இடம்பெறுகிறது. அதோடு யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவு சின்னங்களில் உள்ள மெக்காவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.