ரியாத்:

லெபனானில் தங்கியுள்ள சவுதியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் லெபனானுக்கும் சவுதிக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு ஏமனில் இருந்து ஏவுகனையை ஏவிவருவதாக சவுதி குற்றம்சாட்டியுள்ளது. லெபனானிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சன்னி முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த சவுதி அரேபியாவுக்கும், ஷியா முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற ஈரானுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை உள்ளது.

இதனால் தங்களது நாட்டிற்கு ஆபத்து ஏற்படுமோ என்று பெரும்பாலான லெபனான் குடிமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் லெபலானில் வசிக்கும் சவுதி அரேபியா குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும், சவுதியர்கள் யாரும் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சவுதி அரசு கேட்டு கொண்டுள்ளது.