ரியாத்:

கத்தார் ஏர்வேசு நிறுவனத்திற்கு வழங்கிய உரிமத்தை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் அதனுடைய அலுவலகங்களை மூட சவுதி அரசு கெடு விதித்துள்ளது.

 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன், அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகளும் கத்தாருடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை திடீரென துண்டித்தன.

கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள் அறிவித்தன. கத்தாருடன் கொண்டுள்ள வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை துண்டி க்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 5 நாடுகள் வரிசையில் லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் இணைந்தன.

கத்தார் உடனான உறவை 7 நாடுகள் துண்டித்திருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. கத்தாருடன் தூதரக உறவை துண்டித்த சவுதி அரேபியா அடுத்த கட்ட நடவடிக்கையாக கத்தார் ஏர்வேசுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்துள்ளது.

சவுதி அரேபியா விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் கத்தார் ஏர்வேஸ் அதனுடைய அலுவலகங்களை 48 மணி நேரங்களில் மூட கெடு விதித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் பணியாளர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்ப பெறப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தார் ஏர்வேஸ் விமானங்கள் சவுதி அரேபியாவில் தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்த க்கது.

கத்தாரில் இருந்து வருவதற்கும், சவுதியில் இருந்து கத்தார் செல்வதற்கும் முன் பதிவு செய்திருந்த பயணிகள் அந்த விமான நிறுவன இணையதளத்தை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கத்தார் எல்லைப் பகுதியையும் சவுதி மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் உணவு பொருள் உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்றுமதி, இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.