ரியாத்: 
வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை என்று  சவுதி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
அதில் பங்கேற்கச் சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி 60,000 யாத்திரிகர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். இதனிடையே கடந்தாண்டு கொரோனா உச்சக்கட்டத்திலிருந்ததால் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது.இருப்பினும்,  கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு யாத்திரிகர்கள் தடை விதித்த சவுதி அரேபியா தனது எல்லைகளையும் மூடியிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து.  வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை என்று  சவுதி அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராக் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்கா புனித யாத்திரை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.