ரியாத்

சௌதி அரேபியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70% ஏர்கண்டிஷனருக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.

சௌதி அரேபியாவில் பெட்ரோலிய பொருட்களின் மூலமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.   எப்போதுமே இந்தப் பகுதிகளில் சூரிய ஒளி இருப்பதால் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.   கடந்த வருடம் உற்பத்தியான மின்சாரத்தில் 59% பெட்ரோலிய எண்ணெய் மூலமும் 41% எரிவாயு மூலமும் உற்பத்தி செய்யப்பட்டது.

அரேபிய நாடுகள் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் அங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும்.    எனவே எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் அனைத்து இடங்களிலும் ஏர் கண்டிஷனர் ஓடிக் கொண்டே இருக்கும்.    எனவே உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70% ஏர்கண்டிஷனர்க்ளுக்கே உபயோகப் படுத்தப்படுகிறது.

சௌதி அரேபியா பாலைவனத்தை ஒட்டி உள்ள நாடு என்பதால் குடிநீர் தட்டுப்பாடு இங்கு அதிகம் உண்டு.   அதனால் கடல் நீரை சுத்தீகரிப்பதின் மூலமே 60% நீர் கிடைக்கிறது.  மீதமுள்ள நீர் தேவைகளுக்கு நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப் படுகிறது.  கடல்நீரை சுத்தீகரிக்க மின்சாரத் தேவை அதிகம் உள்ளது.  அதனால் அதற்கு 20% மின்சாரம் செலவாகிறது.

மீதமுள்ள 10% மட்டுமே தொழில் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.