லங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவுதி அரேபியாவில்  2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அது தொடர்பான பயங்கரவாதிகளை இலங்கை உள்பட அண்டைநாடுகள் வேட்டையாடி வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள், இந்தியாவில் கேரளாவின் காசர்கோடு பகுதியில் பயிற்சி பெற்றதாகவும், மற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில்தான் தஞ்சம் அடைந்துள்ளதாக இலங்கை ராணுவ ஜெனரல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவூதியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களில் மவுலானா ரிலா என்பவர், பிரபலமான ஷாங்ரி லா ஓட்டல் குண்டுவெடிப்பு குற்றவாளி ஷகரான் ஹாசிம் என்பவரின் மைத்துனர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாகன்வாஜ் என்ற பெயரில் பயணமானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஷகரான் ஹாசிம் என்பவர் தவ்கீத் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பை சேந்தவர்கள் உதவியுடன்தான் இலங்கை குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது.