சென்னை
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவை இந்த மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரு தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நாட்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஆகும்.
எனவே சனிக்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்கக் கோரி தமிழக ஆசிரியர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அதன்படி சனிக்கிழமை 16 ஆம் தேதி அன்று விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
இதே கோரிக்கையை பாலிடெக்னிக் ,மற்றும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் எழுப்பியது. இதையொட்டி தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசு விடுமுறை நாட்களான வியாழன் வெள்ளியுடன் சனிக்கிழமையும் விடுமுறை என அறிவித்துள்ளது.