‘டெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்நதுள்ளது. . 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், வெடிவுபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோக சம்பவம், நெஞ்சை கசக்கிப் பிழிகின்றன. உடனடியாக நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]