சாத்தூர்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகலில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் காயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத்தூா் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் ஏழாயிரம்பண்ணையைச் சோந்த சந்தனமாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள்  பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.  நேற்று, வழக்கம்போல் ஆலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  பென்சில் பட்டாசுகளுக்கு முனைமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வால் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது உடனே அருகில் இருந்து பட்டாசில் பரவி வெடித்துச் சிதறின. வெடிச்சிதறில் காரணமாக, அடுத்தடுத்த அறைகளிலும் தீ பற்றின. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறத்தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, தொழிலாளர்களை மீட்டனர்.  இந்த வெடிவிபத்தில் ஆலையின் இருந்த 10க்கும் மேற்பட்ட அறைகளில் 5 அறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.  மேலும், பணியில் இருந்த  ஏழாயிரம்பண்ணையைச் சோந்த தங்கலட்சுமி (40), நடுசூரங்குடியைச் சோந்த கா்ப்பிணிப் பெண் கற்பகவள்ளி (22), செல்வி (33), மேலபுதூரைச் சோந்த நேசமணி (38), அன்பின் நகரத்தைச் சோந்த சந்தியா (20) உள்பட 9 போ தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் ஏராளமானோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  அவர்களில், 8 பேர்  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 8 பேரின்  உயிரிழந்தனர். மொத்தம் 18 பேர் வரை நேற்று மாலை நிலவரப்பட்டி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காயமடைந்த 24 தொழிலாளா்கள் சிவகாசி, கோவில்பட்டி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில்,

இந்த  நிலையில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாராயணன் என்பவர் இரவு  உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.