சென்னை:

சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தோல்வி அடைந்த  திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சாத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க வேட்பாளர் சீனிவாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் வெற்றி பெற்றார். அவரது  வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி,தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து ராஜவர்மன் வெற்றி பெற்றார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.