திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 66 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம். 2 வயது குழந்தை சுஜித் நிச்சயமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு. நிச்சயமாக அந்தக் குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையோடு” என்று தெரிவித்துள்ளார் சத்யராஜ்.