சென்னை

ற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

 

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. ஆகவே எந்த நிகழ்ச்சிகளையோ, விழாக்களையோ நடத்துவதற்கு முன்பு தேர்தல் ஆணயத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

தொழிலாளர் தினமான மே தினம் வரும் மே 1-ந் தேதி கொண்டாடப்படுவதால் கூட்டம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொழிலாளர் அமைப்புகள் நடத்துவது வழக்கம். இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கோரியுள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது குறித்து,

‘மே தின நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்தான் வழங்க வேண்டும் என்பதால், மாவட்ட நிர்வாகங்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்பட உள்ளது’

என்று அறிவித்துள்ளார்.