
சண்டிகார்: தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழ்நாட்டின் சத்யன் ஞானசேகரன் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிச்சுற்றில், அஜந்தா சரத் கமலை தோற்கடித்தார் சத்யன்.
ஹரியானா மாநிலத்தில், 82வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய அஜந்தா சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜந்தா சரத், ஏற்கனவே இப்பட்டத்தை 9 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சத்யனோ, 3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றும் கோப்பையை கோட்டைவிட்டவர்.
எனவே, இந்தமுறை உறுதியுடன் போராடி, 4-2 என்ற கணக்கில் வென்று, முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றினார்.
இதன்மூலம், கோப்பையுடன், ரூ.2.5 லட்சம் பணமுடிப்பையும் பெற்றார் சத்யன்.
[youtube-feed feed=1]