சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கும்படி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், அடுத்த நாள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழப்புக்கு, காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவின் பேரில்  விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவரை ஒருமையில் விமர்சித்ததாக புகார் அளித்திருந்தார். மேலும், அவரிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்தார். அவரை சக ஆண் காவலர்கள் மிரட்டியது, குறித்து மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தால் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டு, அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளித்த பெண் காவலர் மற்றும் அவரது எ குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதுடன் வழக்கின் விசாரணை ஜூலை 2ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.