நெல்லை:
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணத்தை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்துள்ளது. ஏற்கனவே சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் விசாரணைக்கு காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழகஅரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக அறிவித்தது.
இதற்கிடையில், சிபிசிஐடியை உடனே விசாரணையை தொடங்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்பட அனைத்து ஆவணங்களையும் உடனே கையக்கப்படுத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கை சிபிஐ சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் ஏற்றுள்ள நிலையில், அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீடு ,பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனை என சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டு உள்ளது.