சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் செயற்கைகோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.112 கோடியில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்ப தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது

சுவர் அமைத்தால் ஓடையின் அகலம் சுருங்கி, தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளதாக மனுதார் தரப்பில் கூறப்பட்டது. எனவே ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்பும் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க கோரியும், ஓடையின் போக்கை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக் கோரியும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். நீர் நிலைகளின் செயற்கை கோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.