கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் , சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

ஆக்‌ஷன் அட்வெஞ்சராக உருவாகிவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘நானா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘நாடோடிகள் 2’ ஆகிய இரு படங்களும் தயாராகிவிட்டாலும், ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்துள்ள சசிகுமார், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கிறார். இதில், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.

[youtube-feed feed=1]