நெட்டிசன்:
நம்பிக்கைராரஜ் அவர்களின் முகநூல் பதிவு:
நேற்று இந்து முன்னனியினர் கோவையில் பந்த் நடத்தியபோது கோத்தகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பாலகிருஷ்ணன் என்ற 59 வயதான லாரி டிரைவர் கடும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் உள்ளார்.
சசிகுமாரின் சாவுக்கு இந்த பாலகிருஷ்ணன்தான் காரணமா?
பேசுவது இந்துத்வா ஆனால் பெட்ரோல் குண்டு வீச்சில் உயிருக்கு போராடுவதும், அடித்து நொறுக்கப்பட்ட கடைகள், வாகனங்களில் பெரும்பாலானதும் அதே இந்துக்களுடையதுதான்.
கோவையில் நிறைய கடைகளை உடைக்கும்போது ‘பாரத் மாதா கீ ஜே!’ என தேசபக்தர்கள் கத்தினதுதான் உச்சக்கட்ட தேச பக்தி.
சசிகுமாரோடதுதான் உயிருன்னா பாலகிருஷ்ணனோடது என்ன?