சென்னை:

சசிகலா இன்று 2வது நாளாக கூவத்தூர் சென்றார். அங்கு தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.


அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பன்னீர் அணிக்கு வருகின்றனர். ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
‘‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம்’’ என எச்சரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் கவர்னர் அசரவில்லை. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு இன்று 2வது நாளாக சசிகலா சென்றார். நேற்று இருந்ததை விட அதிகமார்கள் புடை சூழ சசிலகா கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.

ஏற்கனவே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வந்து சந்திக்கிறோம் என்ற சசிகலாவின் கோரிக்கையும் கவர்னர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் கவர்னருக்கு எதிராக அடுத்து எத்தகைய போராட்டங்களை நடத்தலாம் என்பது குறித்து என்று சசிகலா எம்எல்ஏ.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுத்து அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.