சென்னை: ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து சசிகலா திடீரென தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.

பிப்ரவரி மாதம் சென்னை வந்தபின் முதன் முறையாக சசிகலா தஞ்சை பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சையில் தனது உறவினர்களை சந்திக்க அவர் சென்றுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் தங்கி அவர் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சசிகலா கணவர் நடராஜனின் நினைவு நாள் வரும் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் விளாரில் உள்ள அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்த சசிகலா முடிவு செய்துள்ளார் என்றும், நாளை நடைபெறும் நடராஜன் அண்ணன் பழனிவேலின் பேரக் குழந்தைகள் காதணி விழாவில் கலந்து கொள்ள தஞ்சை புறப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி சென்னை வந்த பின்னர் சசிகலா  முதன் முறையாக தஞ்சை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]