சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Must read

சென்னை:
சிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை (பிப்ரவரி 8) சசிகலா சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். எனவே சென்னைக்கும் அதேபோல அதிமுக கொடி கட்டிய காரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை சென்னை வரும் சசிகலா பேரணியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில் சனிக்கிழமை இரவு முதல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகம் நுழைவுவாயில் முழுவதுமாக அடைக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் புதிதாக 50 சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article