தஞ்சாவூர்: கணவர் நடராஜன் இறந்த 3வது நினைவு தினமான இன்று, அவரது நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா, கடந்த ஜனவரி 27ம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையானார். அதன்பின் பெங்களூருவிலிருந்து சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீரென தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.
இது சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சில கோவில்களுக்கும், உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர், இன்று அவரது கணவர் ம.நடராஜன் மறைந்த தினத்தையொட்டி, தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இன்று நடராஜனின் 3வது நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.