டில்லி,

சிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது, வரும் 17ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தற்போதை தமிழக அரசியல் நிலவரம் காரணமாக அவசர வழக்காக எடுத்து, உடனடியாக விசாரிக்க கோரி வற்புறுத்தியது. ஆனால், உச்சநீதி மன்றம் உடனே அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டது.

சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், அதுவரை சசிகலா முதல்வராக பதவியேற்பதை தள்ளி வைக்கும் வகையில் தடை விதிக்க கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வழக்கு தாக்கல் செய்தது.

இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்து  வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.