சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, திடீரென தஞ்சைக்கு பயணமான நிலையில்,இன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த நிலையில், தற்போது முதன்முறையாக திடீரென தஞ்சை பயணமானார். தஞ்சையில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரில் ஒரு வார காலம் தங்கியிருந்து அவர் ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்த நிலையில், இன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் சசிகலா சாமி தரிசனம். இதைத்தொடர்ந்து வருகிற 20ஆம் தேதி அவரது கணவர் நடராஜனின் நினைவு நாள் வருகிறது. அன்றைய தினம் விளாரில் உள்ள நடராஜன் சமாதியில் அஞ்சலி செலுத்த சசிகலா திட்டமிட்டு உள்ளதாகவும், மேலும் அவரது குடும்பத்தினரின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.