சசிகலாபுஷ்பா 'வல்கர்' படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு!

Must read

டில்லி:
சிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய சொல்லி அதிமுக தலைமை வற்புறுத்தியது.
ஆனால், அவர் ராஜினாமா செய்ய முயாது எனறு தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.  இதுகுறித்து மக்களவையில் பேசி பரபரப்பையும் உண்டாக்கினார்.
அதையடுத்து, அவர்மீது பல்வேறு வழக்குகள் பாயத்தொடங்கின. அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலாபுஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர்மீது  பாலியல் புகார் அளித்தனர்.
sasi
இதன்காரணமாக தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் வாங்கி உள்ளார்.
இதற்கிடையில் சசிகலா அவரது ஆண் நண்பர்களுடன் இருந்த அநாகரிகமான படங்கள், திருச்சி சிவாவுடன் இருந்த நெருக்கமான படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவ்வப்போது புதுபுது வல்கரான படங்கள் சமுக வலைதளங்கள் மூலம்  பரவி வருவதால் அனைவரின் பார்வைக்கும் கேலிப்பொருளாக காட்சி அளித்ததார் சசிகலாபுஷ்பா.
இதனையடுத்து,  தன்னை தவறாக சித்தரிக்கும் படங்களை  நீக்கவேண்டும் என டெல்லி  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கை  விசாரித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பா குறித்த தவறான படங்கள் சமுக வளைதங்களிள் பரவுவதை தடுக்க நடவடிகை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் இதுபோல தவறான, அநாகரிகமான படங்கள்  வாட்ஸ்அப், பேஸ்புக்,  டிவிட்டர்  மூலம்  வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

More articles

Latest article