பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதனிடையில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்றுமுன் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா அவர்கள் சோ உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறந்து ஒரு தினம் கூட ஆகாத நிலையில் ஜெ.வின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலிருந்த சோ அவர்கள் காலமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.