சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா நோக்கி புறப்பட்டு வருகிறார். அவரது வருகையை அமமுகவினர் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில், சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆன சசசிகலா கடந்த 10 நாட்களாக பெங்களூரில் ஓய்வெடுத்து வந்தார். இன்று (8ந்தேதி) அவர் தமிழகம் வருகிறார். அவர் வரும் வழியில் அமமுகவினர் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, சசிகலா காரில் அதிமுக கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், சசிகலா இன்று திட்டமிட்டபடி, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில், அதை மதிக்காமல், அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்ட்டு வருகிறார். அவரடுன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.
அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா தமிழகம் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் சசிகலாவை காரில் அழைத்து வருகின்றனர். சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க கூடி உள்ளனர்.