நெட்டிசன்:

சமீபத்தில் நியூஸ் 18 சேனலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பேட்டி ஒளிபரப்பானது. அவரது முதல் பேட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சிகரமான விமர்சனங்கள் எழுந்தன.

“சசிகலா அமர்ந்தருக்கும் நாற்காலிக்கு கீழே, டேப் ரிக்கார்டர் உள்ளது. கேள்விகள் முன்பே சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டு, அதற்கான பதிலை வேறு யாரோ பேசி பதிந்துவிட்டனர். அதைக் கேட்டு, கேட்டு சசிகலா பேசினார்” என்பது ஒரு குற்றச்சாட்டு.

ஆனால் இதுகுறித்து திவ்யா துரைசாமி (Dhivya Dhuraisamy ) தனது முகநூல் பதிவில் விளக்கியுள்ளார். அதில் அவர், “ அந்த பேட்டி குறித்த படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது இயர் ஃபோனோ டேப் ரிக்கார்டரோ அல்ல. அது மைக்கோடு கணெக்ட் செய்யப்பட்டிருக்கும் பேட்டரி..

டிவியில் காட்டப்படும் மைக்குகள் வேறு. இந்த மைக் வேறு. இதன் பெயர் லேபில் மைக்.அதை இயக்குவதற்கு பேட்டரி வேண்டுமல்லவா. அந்த பேட்டரிதான் அது. தவறாக புரிந்து கொண்டு பதிவிட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே நேரம், “சசிகலாவின் ஒரு பக்கம் மட்டுமே நேயர்கள் பார்க்கும்படி இருந்தது. அவரது மறு காதில் இயர்போன் பொறுத்தப்பட்டு, கேள்விகளுக்கு வெளியில் இருந்து யாரோ ஒருவர் பதில் சொல்ல அதை கிளிப்பிள்ளை போல சசிகலா சொன்னார். அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தை இடை வெளி விட்டு பேசினார்” என்று எழுந்துள்ள விமர்சனத்துக்கு இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை.