சென்னை: அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel