சென்னை:
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இன்றைய தீர்மானத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமனம் ரத்து என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார்.10.30 மணி அளவில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்பு ஆற்றினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கட்சியை மீட்டெடுத்துள்ளார், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மறைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.
முதல் தீர்மானமாக
இரட்டை இலையை மீட்க வேண்டும் என்று குறிப்பிடட்டார்.
தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது
ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அரசு எடுத்த முடிவுக்கும், அதற்காக ரூ.15 கோடி ஒதுக்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள், யார் யார் எந்தெந்த பொறுப்புகளில் இருந்தார்களோ அதே பொறுப்பில் தொடரலாம்.
வார்தா புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம்
ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றியவர்களுக்கு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம்
சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து என்றும் தீர்மானம்.