சென்னை,
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது. அவர் தற்காலிக பொதுச்செயலாளர்தான்.
அதிமுக சட்டவிதிகள் 19/8 கீழ்தான் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க எந்தவித அதிகாரமும் வழங்கப்பட வில்லை என்று கூறினார்.
அதேபோல் 20/5 விதியின் கீழ், பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தால், இதற்கு முன்னாள் இருந்த பொதுச்செயலாளர்தான் அந்த பதவியில் தொடர முடியும் என்று உள்ளதை சுட்டிக்காட்டி னார்.
ஜெயலலிதா இறந்து 20 நாளில் பொதுச்செயலாளர், 60 நாளில் முதல்வர் பதவியை பிடிக்க எண்ணு பவர் பதவி ஆசை இல்லாமலோ இவ்வளவுகாலம் ஜெவுடன் இருந்தார் என்றும் குறிப்பிட்டார்.