பெங்களூர்,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைத்துறை டிஜிபிக்கு ரூ.2 கோடி லஞ்சமாக கொடுத்து, வசதிகளை பெருக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறையை ஆய்வுசெய்த டி.ஐ.ஜி ரூபாய இதுகுறித்து பரபரப்பு கடித்ததை சிறைத்துறைக்கு அனுப்பி உள்ளார்.

ரூபாவின் புகார் கடிதத்தை டிஜிபி சத்யநாராயண மறுத்துள்ளார். ஆனால், ரூபா, வெளிப்படையான விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறினார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள்  பற்றி எழுப்பப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.