![a1]](https://patrikai.com/wp-content/uploads/2016/08/a1.jpg)
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.
இவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.