
இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகமாக தயாராகி வருகிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். இன்ஃபினிட்டிவ் பிலிம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]#மழைபிடிக்காதமனிதன் #Salim2 welcomes #SupremeStar 🔥
Happy to work with you @realsarathkumar sir 😊🤝@vijaymilton @FvInfiniti @akash_megha @dhananjayaka @Donechannel1 👍 pic.twitter.com/nnYfV2gO55— vijayantony (@vijayantony) November 8, 2021