டில்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விசாரணை  உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்துள்ளார்.

சாரதா சிட்பண்ட் மோசடியில் மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க சிபிஐ முயற்சி செய்ததை தொடர்ந்து பிரச்சினை பூதாகரமாகியது. மத்தியஅரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி போர்க்கொடி உயர்த்த உச்சநீதி மன்றம் தலையிட்டது.

இந்த வழக்கை உச்சநீதி மன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்னிலை யில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் மே.வங்காள அரசு சார்பில் வக்கீலாக  ஆஜராக போவதாகவும் கூறினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 27ந்தேதிக்கு பெஞ்ச் ஒத்தி வைத்தது.