ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், இப்போது விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்கு முதலில் அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். என்ன நடந்தது என தெரியவில்லை.
அனிருத்தை மாற்றி விட்டு, இப்போது சந்தோஷ் நாராயணனை இசை அமைப்பாளராக போட்டுள்ளார், கார்த்திக் சுப்புராஜ்.

தற்காலிகமாக ‘சீயான் -60’ என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்ரமுடன், சிம்ரன் ஏற்கனவே பிதாமகன், துருவ நட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்ரன் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]