இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றும் கோரிக்கை நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது. நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை அது கொண்டுவரும். ஒரே கோரிக்கை என்னவென்றால் தயவுசெய்து போனமுறை கூட்டமாக வெளியே வந்து குழுமியது போல முட்டாள்தனமாக எதையும் செய்துவிடவேண்டாம் என்பதே. புரிந்துகொள்ளாத, பாதுகாப்பு உணர்வற்ற, அப்பட்டமாகக் குரைக்கத் தொடங்கியிருக்கும் முட்டாள்கள் இந்த பதிவைப் படியுங்கள். இதுதான் அதற்குப் பின்னால் உள்ள அர்த்தம்”