ரஜினியுடன் மீண்டும் சந்தானம்
மூத்த பத்திரிகையாளர் ஏமுமலை வெங்கடேசன்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்று 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த உற்சாகத்தில் ஜெய்லர் பாகம் 2 தொடங்கப்பட்டு ரஜினி- இயக்குனர் நெல்சன் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்து பட உருவாக்கத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
டெய்லர் படத்தின் முதல் பாகத்தை எப்படியும் மிஞ்சியாக வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தில் என்னென்ன சிறப்பம்சங்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு சிறப்பு அம்சங்களையும் சேர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 பாகத்தில், தெலுங்கு மாஸ் ஹீரோ நாகார்ஜுன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு மார்கெட்டையும் குறிவைத்து, ஏற்கனவே ரஜினியின் கூலி படத்தில் நாகார்ஜுனா சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போது ஜெயிலர் 2 நாகார்ஜுனா கொண்டு வரப்படுகிறார்.
இன்னொரு பக்கம் ரஜினிக்கே உரித்தான காமெடி காட்சிகளில் வலு சேர்க்க, நடிகர் சந்தானமும் ஜெயிலர்- 2- ல் இணைகிறார்.
பல வருடங்களாக காமெடியனாக இருந்து வடிவேலு,விவேக்கிற்கு பிறகு கலக்கிய சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு தனி ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார்.
சந்தானம் விட்டுச்சென்ற காமெடி இடத்தை இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை. ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடியனாக சந்தானம் இனி மீண்டும் நடிக்க மாட்டார் என்றே சொல்லப்பட்டது.
ஆனால் சந்தானம் விஷயத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் 2 படம் அந்த கொள்கையை தகர்த்தெறிந்து விட்டது என்கின்றனர். இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது
ஆக ஜெயிலர் 2வில் சந்தானம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
– செய்தி பிரிவு