2004ம் ஆண்டு நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ’மன்மதன்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார் நடிகர் சந்தானம்.

விஜய் டிவியில் சந்தானம் பங்கேற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி அவருக்கு பெரும் வரவேற்பையும், புகழ் வெளிச்சத்தையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் 2002ம் ஆண்டு நடிகை ராதிகா நடித்த அண்ணாமலை தொடர் சன்டிவியில் ஒளிபரப்பானது. அந்த தொடரில் நடிகர் சந்தானம் மிகச்சிறிய ரோலில் நடித்துள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. லொள்ளு சபாவில் நடித்து மட்டுமே அவர் முன்னுக்கு வந்ததாக நினைக்கும் பலர், அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களில் சந்தானம் நடித்துள்ள பழையப் புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர் .