
சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில், ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போராளிகளை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel