130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004-ல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

அவரின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

அவர் நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.