சங்கரன் கோவில்
இன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா பக்தர்கள் இல்லாமல் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் நகரில் அமைந்துள்ள சங்கர நாராயணன் – கோமதி அம்மன் ஆலயம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இந்த விழாவைக் காண மாநிலம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் நாடெங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சங்கரன் கோவில் ஆடித் தபசு விழா தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
எனவே இன்று சங்கரன் கோவில் ஆலயத்தில் ஆடித் தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்தின் உள் பிரகாரத்திலேயே சுவாமி வீதி உலா நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.