“கலங்க்’ படத்தில் சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீதேவி சேர்ந்து நடிக்கவிருந்தனர் எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி மரணமடைந்ததால், இப்படத்திற்கு மாதுரி தீக்ஷித் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

21 ஆண்டுகளுக்கு முன் வெளியான “கல்நாயக்’ படத்திற்குப் பின் சஞ்சய்தத்துடன் மாதுரி சேர்ந்து நடிக்கவுள்ளார்

21 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைத்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சஞ்சய் தத் . மாதுரி போன்ற மூத்த நடிகையுடன் நடிப்பது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் சஞ்சய் தத் .

‘கலங்க்’ திரைப்படம் வரும் ஏப்.17ம் தேதி ரிலீசாகவுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலக்கட்டத்தில் இருந்த ஆழமான காதல் கதையை கூறும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.