போதை மருந்து விவகாரத்தில் கைதான ராகினி திவேதி, சஞ்சனா இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின் றனர். இதற்கிடையில் சஞ்சனா கல்ராணிக்கு டாக்டர் ஒருவருடன் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக நெட்டில் தகவல் பரவுகிறது.
பெங்களூரில் சஞ்சனா வீட்டில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது சஞ்சனா வீட்டிலி ருந்து ஒரு நபர் வெளியில் சென்றார். அவரைப்பற்றி விசாரித்தபோது சஞ்சனா திருமண விவகாரம் அம்பல மானது.
இதுகுறித்து சஞ்சனா தாயார் ரேஷ்மா கல்ராணி கூறும்போது, ‘டாக்டர் அஜீஸிக்கும் சஞ்சனாவுக்க்கும் இரண்டு வருடத்துக்கு முன் திருமண நிச்சயார்த் தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் நடவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
மலையாளத்தில் ’சில நேரங்களில் சிலர்’ என்ற படத்திலும் நடித்து வரும் சஞ்சனா தமிழில் பெயரிட்டாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.
Patrikai.com official YouTube Channel