
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது.
நடன இயக்குநராக இருந்தவர் “3:33”, என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான சரவணன், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்பதும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை சந்த்ரு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் 3:33 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]