வேலூர்:
ணல் கடத்தலை தடுத்த இன்ஸ்பெக்டரை அடித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நள்ளிரவு பெருமுகை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கினர். மணல் ஏற்றி வந்த அந்த லாரி,  நிற்காமல் வேகமாக சென்று அப்பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள்  சென்றது.     லாரியை நிறுத்தி விட்டு  டிரைவர்  அங்கிருந்து  தப்பி ஓடினார்.
manal
போலீசார் லாரியை விரட்டி வந்தனர்.  லாரி கல்லூரிக்குள் நிற்பது கண்டு ,  கல்லூரிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் கல்லூரி காவலாளி போலீசாரை உள்ளே விட  மறுத்துவிட்டார்.  இதனால் தகராறு ஏற்பட்டது.
ஆனால்,    இன்ஸ்பெக்டர் மணல் கடத்தல் லாரியை பிடிக்க வந்துள்ளதாக கூறி  கல்லூரி    உள்ளே நுழைந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகி  ஜி.ஜி.ரவி தனது அடியாட்கள் கும்பலுடன் வந்து  இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி சிறைபிடித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், டிஎஸ்பி தலைமையில் போலீசார் கல்லூரிக்கு வந்து இன்ஸ்பெக்டரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக  சேர்த்தனர்.
இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜி.ஜி.ரவி உட்பட 16 பேர் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கைது செய்தனர். ஜி.ஜி. ரவி அதிமுக கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.