மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மணல் வியாபாரத்தை தமிழகஅரசின் பொதுப்பணித்துறையே மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மனுவில், வைகை நதிக்கரை பகுதி, கீழடி போன்ற பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்த இடங்களில் இருந்து,  அரசின் அனுமதியை மீறி சவுடு மணல் எடுக்கப்பட்ட வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கடத்தல் மணல் விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆட்சியர்கள் சரியான முறையில்  பின்பற்றாவிட்டால்,  மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், விவசாய நிலங்களில்,  சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  சிவகங்கை ஆட்சியர் விரிவான பதில் அளிக்க கோரி உத்தரவிட்டு வழக்ககை செப்டம்பர் 7ச்தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.