சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மணல்மாபியா சேகர் ரெட்டி மீண்டும் திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது.
ஏற்கனவே அவர் உறுப்பினராக இருந்த நிலையில், அவர்மீது மணல் கடத்தல் உள்பட பல்வேறு புகார்களில் சிக்கிய சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் இருந்து அப்போது ரூ.131 கோடி அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சேகர் ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன் காரணமாக தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்மீதான 3 வழக்கு களில் 2 வழக்குளை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே ரத்து செய்து விட்டது. ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் சேகர் ரெட்டிக்கு மீண்டும் தேவஸ்தான உறுப்பினர் பதவி வழங்கி உள்ளது ஆந்திர மாநில ஜெகன்மோகன் ரெட்டி அரசு.
. மேலும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பதி தேவஸ்தான குழுக்களின் தலைவராகவும் சேகர் ரெட்டி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்திய சிமென்ட்ஸ் உரிமையாளரும், சிஎஸ்கே உரிமையாளருமான சீனிவாசனுக்கும் தேவஸ்தான உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.