சென்னை:

வெளிநாடுகளில் இருந்து  மணல் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசுகூ புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தனிநபர்கள் மணல் இறக்குமதி செய்ய தடை விதித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை மட்டுமே மணல் விற்பனைக்கான உரிமம் பெற்ற அமைப்பு என்றும்,  இறக்குமதி செய்யப்படும் மணலை விதிகளுக்கு உட்பட்டு அரசிடமே விற்றுவிட வேண்டும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனிநபர்கள் விற்பனை செய்ய முடியாதுஎன்றும் கூறி உள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மணல் இருப்பு கொண்டு செல்லுதல், விற்பனை பற்றி பொதுப்பணித்துறை அறிவிக்கும் எனவும் இதனை மீறி தனிநபர்கள் மணல் விற்பனை செய்தால், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும்  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.