சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிகாரத்தை தேடுபவர்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது, சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபட கூறி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதியின் கருத்துக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் கண்டனம் செய்துள்ளன. மேலும் உதயநிதி மீது, பல மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், கூறியுள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களை எஜமானர்க ளாகக் கருதுபவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று கூறியதுடன், சனாதன தர்மம் தேசிய மதம், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது, அழிக்க முடியாது என தெரிவித்தார்.
ராவணன் கூட கடவுளை தாக்க முயன்றான் ஆனால் விளைவு என்ன? ராவணன் தன் அகங்காரத்தால் அழிந்தான், என்று கூறிய யோகி, பழங்காலத்திலிருந்தே தாக்கப்பட்ட சனாதன தர்மத்தை சிலர் இன்னும் அவமதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றவர், இத்தகைய சிதைந்த மனநிலை கொண்டவர்கள் பகவான் ஸ்ரீ ராம், ஸ்ரீ கிருஷ்ணர், மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோரின் மரபுகளை மதிப்பதில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்தியா குறித்து கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை அவமதிக்க சிலர் தீங்கிழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடிக்க முகலாய மன்னர் பாபர் முயற்சி செய்ததாகவும், ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம ஜென்மபூமியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருவதாகவும் ஆதித்யநாத் கூறினார்.
இந்து என்பது மதம் அல்ல, இந்தியர்களின் கலாச்சார அடையாளம். துரதிர்ஷ்டவசமாக, சிலர் இந்து அடையாளத்தை குறுகிய எல்லைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர், என்றார்.
‘பாரத் வெர்சஸ் இந்தியா’ என்ற அரசியல் விவாதத்தின் மத்தியில், உ.பி முதல்வர், நாடு பழங்காலத்திலிருந்தே பாரதம் என்று அழைக்கப்பட்டு வருவதாகவும், அதன் குடிமக்கள் ’இந்துக்கள்’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறினார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு மெக்காவுக்குச் செல்லும்போது, அவர்கள் சவுதி அரேபியாவில் இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அனைத்து இந்தியர்களும் நாட்டின் மரபுகள் மற்றும் சனாதன தர்மத்தின் மரபுகளில் பெருமிதம் கொள்ள வேண்டும், இது உலகத்தை மனித நல்வாழ்வின் பாதையில் செல்ல ஊக்குவிக்கிறத, இது இந்தியாவின் தேசிய சின்னம் – உந்துதலைக் கொடுப்பதற்கும், மனித குலத்தின் நலப் பாதையை உலகுக்குக் காண்பிப்பதற்கும் ஒரு ஊடகம், என்று ஆதித்யநாத் கூறினார்…
இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்பாத மக்கள் ஒவ்வொரு அடியிலும் தடைகளை உருவாக்க முயற்சிப்பார்கள். ஒவ்வொரு காலத்திலும், உண்மையை நிராகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராவணன் உண்மையைப் பொய்யாக்க முயற்சிக்கவில்லையா? ஹிருண்யகஷ்யப் கடவுளையும் சனாதன தர்மத்தையும் அவமதிக்க முயற்சிக்கவில்லையா?
கன்சா தெய்வீக அதிகாரத்தை சவால் செய்யவில்லையா? தெய்வீக அதிகாரத்தை சவால் செய்தவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டனர், என்று அவர் கூறினார். கடவுள் உண்மையாகவும் நித்தியமாகவும் இருப்பது போல், சனாதன தர்மமும் உண்மை மற்றும் நித்தியமானது. நாம் எப்போதும் அந்த உண்மையையும் நிரந்தரத்தையும் ஏற்றுக்கொண்டு நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.